YETTU VARI

நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் உனை
நினைப்பதில் நெஞ்சுக்கு இதமிருக்கு
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் உனை
பார்ப்பதில் கண்ணுக்கு சுகமிருக்கு

பேசிக் கொண்டே இருக்க வேண்டும் நாம்
பேசினால் ஒரு மாதிரி இருக்கு
கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் உன்
குரலில் ஏதோ ஒன்றிருக்கு

எட்டே எட்டு வரிகள் தான் இவை
எல்லோரும் சொல்லும் மொழிகள் தான்
என்றாலும் இதிலோர் தனிச் சிறப்பு ஒளிந்து
இருக்கின்ற தென்பதே அடிக் குறிப்பு

என்னடி இன்னும் யோசிக்கிறாய் சிறப்பு
எதுவென்றா நீ யோசிக்கிறாய்
மேலே படிடி தானா புரியும் - உன்
காலே தரையில் படாமல் பதியும்

எல்லோரும் பேசிய வைத்தான் எனினும்
அதெல்லாம் யாரோ யாரிடமோ ...
ஆனால் இந்தச் செவ்வரி எட்டும் - என்
ஆரமு துந்தன் ஒருத்திக்கு மட்டும்

உனக்காக எழுதப்பட்ட வரிகள்
உன் கைகளால் எடுக்கப் பட்ட கவிதை
உன் கண்களால் பார்க்கப்பட்ட வரிகள்
உன் செவ்வாயால் படிக்கப்பட்ட கவிதை

உன் பொன்மனத்தில் பதிந்து விட்ட வரிகள்
உன் மென் மனதை பாதித்த கவிதை
உனை பாடாய் படுத்துகின்ற வரிகள்
உனை மேடாய் உயர்த்துகின்ற கவிதை

எட்டு வரிச் சிறப்பு புரிகின்றதா - இப்போது
எனக்காக உன் இதயம் விரிகின்றதா
ஆழ் மனது அழை என்று சொல்கின்றதா - வாய்
ஆகட்டும் பார்க்கலாம் என்கின்றதா

எழுதியவர் : PAVAI-ABBAS (22-Aug-10, 2:29 pm)
சேர்த்தது : abbasghani
பார்வை : 422

மேலே