சுதந்திரத்தாயா? சூர்ப்பனகையா?
கூண்டில் அடைபட்ட கிளிக்கு
சுதந்திரம் தந்து பறக்கவிட்டாய்
சுதந்திரத்தாய் கிளிக்கு நீ
சுதந்திரமாய் சுற்றித்திரிந்தேன்
வெளியில்,
கூண்டுக்கிளிபோல சிறைவைத்தாய்
என்மனம் கிளிப்பிள்ளையாய்
உன் பெயர்சொல்லுவதை
காதலித்தாய் உனக்குள் நீ
சுதந்திரத்தாயா? சூர்ப்பனகையா? நீ