சந்தேக பேய்கள்.....!

மாங்கல்யம் தழை தோங்க மணப்பெண் ஆனாள் அன்று.....
கெட்டி மேல தாளம் முழங்க கல்யாணம்
சுட்டு வட்டாரம் போல சுற்றத்தினர்
அவள் சிரிப்பில் மூழ்கினால் நிலவாக
அர்ச்சனை தூவ பெற்றோர்கள்
வாழ்த்துகளுடன் கல்யாணம் நடக்க
இனி வரும் காலம் வசந்தம் என்று
இருந்தது அவள் மனது……
ஆனால்….
முற்று புள்ளி வைத்தான் அவள் கணவன்
முதல் இரவில் சுட்டெரித்தான் பலதை பேசி
சந்தேக பேய்களை போக்கிழமாக வைத்து
கொண்டு வெறித்து பார்த்து எமனாக வந்தான்
அவள் கணவன்…
வானம் நொறுங்கியது அவள் கனவில்
சாரல் பொழிந்தது அவள் கண்களில்
மங்கை பைத்தியமானால் அவன் வடுவான சொற்களில்....
இடி விழுந்தது அவள் வாழ்க்கையில்
சந்தேக பேயை விரட்ட முடியுமா நீ
அவன் மாறி வருவானா என அவளின் ஏக்கம்
முற்று பெறாத முதிர் கன்னியாக உருவெடுக்க
ஒரு நாள் முடிவெடுத்தாள்
என்ன வாழ்க்கை இது……
என்ன வாழ்க்கை இது……
படிப்பு இல்லை
பெற்றோர்கள் கல்யாணம் ஆனதுடன் காணவில்லை....
யாருமே கை கொடுக்காத நிலையில் அவள் இருக்க
இடிந்து விட்டது அவள் உலகம்
மனக்கதவு பைத்தியமானது
சாதி வெறி உள்ள இந்த உலகத்தில்
ஒரே சாதியை பார்த்து திருமணம் புரிந்தாலும்
சந்தேக சாதியை எப்படி பார்க்க முடியும்
கதறினாள்....
துடித்தாள்....
வாழ்வே வேண்டாம் என முடிவெடுத்தாள்
சாக துணிந்தாள் …..
நெருப்பு வைத்தால் அவள் துணியில் …….
எரிந்தது அவள் தேகம்………
துடித்தது அவள் நினைவு அவள் பெற்றவர்களை எண்ணி
அழகான முகம் கொடூரமாக
அவளை பாலூட்டி சீராட்டி வளர்த்த அவள் தேகம் சாம்பலாகி போனது
ஒரு பானையில் கடைசியாக……….
சந்தேக பேய்களை ஒழிக்க புறப்படுவோம் ….
புறப்படு பெண்ணே…. புறப்படு.......
கணவனா காதலனா....
உன் காலில் நீ நில்
எதற்கு இந்த கோழையான முடிவு
பெற்றவர்களை சற்று எண்ணி கொள்
உற்றவனை அன்றே ஒழி
சந்தேக பேய் வாழ்க்கை வெகு நாட்கள் இராது
அவனை சாக்கடையில் தல்ல இன்னொருத்தி வருவாள்....
அவன் மறு வாழ்வு என்று எண்ணி
எம வாழ்வு அடைவான்……
வினை விதைத்தவன் வினை அருப்பானம்மா…..
உன் ஆத்மா சாந்தி அடையுமம்மா…….!!!


எழுதியவர் : புவனேஸ்வரி (15-Dec-11, 2:21 pm)
பார்வை : 480

மேலே