ஹங்கேரி நதிக்கரையிலிருந்து ...

ஆம்பல் நதிக்கரையின் நீர்த்துளி நீ !
ஆல்ப்ஸ் மலைச்சாரலின் மறுபிம்பம் நீ!
ஹபிஸ் கடவுளின் வரம் நீ !
பிச்சி புல்வெளியின் நீரோட்டம் நீ !
ஆர்டிக் மலைத்தொடரின் உருவம் நீ!
நிழல் நிஜமாகும் தருணம்
எதார்த்தமாய் போன நிஜம் நீ !
என்னை அறியாமல் போன எழுத்துப் பிழை நீ !
உன்னை அறிந்த ஏக்கத்தின் துளி நான் !
நீ கடந்து சென்ற முழுநிலா !
நான் தூர்ந்து போன பிறை நிலா !
நீ எதார்த்தமாக மாட்டிகொண்ட பனித்துளி !
நான் தெரிந்தே மாட்டிகொண்ட நீர்த்துளி !
நீ அறியாமல் வந்து போன சந்திரகிரகணம் !
நான் உதிர்ந்து போன சூரியகிரகணம் !
ஹுயுபாவில் ஒரு பழமொழி உண்டு !
சீக்கிரம் வந்துவிடு மரணமே (பெண்ணே )!
நான் எடுத்த ஜென்மத்திற்கெல்லாம் வழியனுப்ப நீ !
நீ பிறக்கும் ஜென்மத்திற்கெல்லாம் வந்துவிட நான்!
ஆப்பிரிக்காவின் வழித்தோன்றலே !
நானும் சகாராவைத் தாண்டித்தான் வருகிறேன் ...
நான் வருவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் ஆகலாம்
என் பயணம் நெடுந்தூரம் !
உன்னைச் சேராமல் போகலாம் !
பயணத்தை முடித்துக்கொண்டு -ஆன்மாவை
மட்டும் அனுப்புகின்றேன் நீ வழியனுப்பி வை ...
ஹங்கேரி ஆற்றங்கரையின் மறுபக்கத்திலிருந்து
ஒரு உயிரின் நெருடல் ....
என்றும் நிழல்களுடன்
சு.பா.முத்துமாணிக்கம்