ANBU
விழியின் விளையாட்டு இப்போது விதியிட்ட வழியில்...!!! - வாழ்க்கை கவிதை
விழியின் விளையாட்டு இப்போது விதியிட்ட வழியில்...!!!
உன் மேல் கொண்ட
காதலின் ஆழத்தை உணர்கிறேன்
உன்னை பிரிந்திருக்கும்
இந்த நிமிடங்களில்...!
உன் பிரிவை உணர்த்தியது
உன் நினைவு...
என் தவிப்பை உணர்த்தியது
என் தனிமை..
இருதியாக ...
என் காதலை உணர்த்தியது
என் கண்ணீர்...!
இருந்தும் பயனில்லை ...
நீ அருகில் இருந்த போது
ஏற்க மறுத்த என் மனம்
பிரிவில் தான்... உன்னை தேடுகிறது .. !
உன்னுடன் கத்திசண்டை ..
மன்னிக்கவும்... இது இரு விழிகளுக்குள்
நடந்த போராட்டம்...!
இதை எண்ணி
என் விழிகள் இப்போது தான்
கண்ணீர் சிந்துகிறது ..!
இதையெல்லாம் நீ
சிந்தித்திருபாயா என தெரியவில்லை...
ஆனால் என் சிந்தை எல்லாம்
உன் நினைவு தான்..! விக்கல் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் கூட மனம் மறுக்கிறது...! நினைப்பது நீயாக இருந்தால் நீடிக்கடுமே என்று... ! சன் மியூசிக்கிற்கும் இசை அருவிக்கும் உன்னை நேசிப்பதாய் எஸ்செம்மஸ் அனுப்பியே காசையும் துளைதிருக்கிரேன்...! அதை பார்த்தாலாவது என் நினைவு உனக்கு வரும் என்ற ஏக்கத்தில்..! பேஸ் புக்கிலும் கூட ஒரே வகுப்பு என்பதால் குரூப் சேட்டில்... உன் பெயரையே தேடுகிறேன்...! இரவின் தனிமையை விரும்புகிறேன்...
தூக்கம் தொலைத்தேன்...
உன் நினைவையே சுவாசித்தேன் ...
அழுகையின் சுகம் உணர்ந்தேன் ...!
ஆனால் அழ கூட
தேம்பிலை என்னுள் ... ஒரு புறம் அம்மா பார்த்துவிடுவாளோ
தோழிகுத் தெரிந்து விடுமோ என்ற பதற்றம்...!
என் மனகசப்பை பிறரிடம்
சொல்லமுடியாத நிலை... !
இவ்வளவு ஆழமாக உன்னை நேசித்தும் அப்போது
எனைத்தடுத்தது என்ன ? நம் மதமும்...
என் பெற்றோரின் நம்பிக்கையும் தான் ..! என்னை நினைத்தால்
உனக்கு வேடிக்கையாக இருக்கலாம்
ஆம் ,புத்திசாலிகளும்...
தான் அதிகமாக நேசிபவர்களுக்கு முன்
முட்டாள்கள் தான் ...!
எஞ்சியதோ...
கனவிலும் உன் நினைவு ...!
தவறாக நினைத்து விடாதே ...!
நினைவெல்லாம் என் வாழ்வில்
ஒரு முறையாவது உன்னை
நேரில் சந்தித்து பேசவேண்டும் ...! அப்படி கனவில் உன்னை
காணும் போது கூட...
வார்த்தைகள் பயணிக்க மறுக்கின்றன ...!
பேசுவதோ நம் விழிகள் மட்டுமே ..!!!