பிரியும் தந்தைக்கு ஒரு மடல்...!!!

அன்பென்னும் உணர்வை அழகுடன் உணர்ந்தேன் என் தந்தையின் கண்களிலே.
தோல்வியை நான் கண்டதில்லை உங்கள் தோள்களில் நான் நின்றதினால்.
தாய் அவள் சுமந்தது மாதங்கள் மட்டுமே.
நீ என்னை சுமப்பதோ நீ உள்ளவரை.
பிஞ்சு வயதில் நான் பொம்மை மீது கொண்ட மோகத்தினால் பிரிந்தேன் உன்னை.
இளமையில் நட்பின் மீது கொண்ட காதலினால் உன்னை மறந்தேன் நான்.
இன்றோ நெஞ்சு நிரம்பி வழியும் அன்பைக் காட்டும் முன்பு மணமாலை கொண்டேன்,
இத்தனை வருடமும் என் சாமியிடம் பேசிட பல நாட்கள் வரும் என்று வார்த்தைகளை புதைத்து வைத்தேன்.
தேடிய நாள் வருமுன் உன்னை நான் பிரிந்திடும் நாள் வந்ததே.
இன்று நான் கேட்க நினைக்கும் மண்ணிப்புக்கூட,
உமக்கு மரணத்தின் வலியை தருமே.
உமது கால்களை கட்டி என் காலம் எல்லாம் போகணும்,
ஆனால் போகிறேன் கால்களை தொட்டு காலம் எல்லாம் வாழ்ந்திட. . .!!!

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (20-Dec-11, 10:05 am)
பார்வை : 399

மேலே