நானும் மௌனமும்
உன்னிடம் பேசியதனால் பலருக்கு நான் பேசாமடந்தை ஆனேன்
நீ கற்பித்த மொழியினால் நான் விளங்கா புதிர் ஆனேன்
நீ பேசும் வார்த்தைகள் பலருக்கு விடுகதை
அதற்கு என்னிடம் இல்லை விடை
எனக்கு நீ சிறு பிராய சிநேகம்
அனால் உலகிற்கு நீ புயலின் பின் வரும் மேகம்
உன்னை ரசித்த தருணங்கள் பன்மை
அதில் ஒன்று தனிமை
பலரால் பேசபட்டுளது, உன் குரலின் தாக்கம்
நீ என்னிடம் வெளிபடுத்தியது ஒரு ஆழ்ந்த கருத்தாக்கம்
எனது சிந்தனையின் பரிமாணத்தை புதுபித்தாய்
அப்புதுமை எனது ஆற்றலை அறிய செய்தது
சிலருக்கு நீ,
காதலர்களுக்கு இடையே உள்ள ஊடல்;
நெடு நாள் நட்பு உடைந்த துன்பம்;
தோல்விக்கு பின் தமர்க்கு தாமே சொல்லிகொள்ளும் சமாதானம்;
வெற்றிக்கு பின் இறைவனுக்கு கூறும் நன்றி;
உயிர் பிரியும் இறுதி தருணம்.
அனால் எனக்கு நீ,
என்னுடன் நான் உரையாடிக்கொள்ளும்,ஒரு கருத்தரங்கம்.