கானல் நீர் காதல்.........!
சிறகுகள் இல்லை என்றாலும்
உன் நினைவுகளை சிறகுகளாக்கி பறக்கின்றேன்.......
ஆகாயத்தில் கங்கையைத் தேடுகின்றேன்
ஆற்றில் அலைகளைத் தேடுகின்றேன்........
புயலில் தென்றலைத் தேடுகின்றேன்
எரியும் நெருப்பில் இன்பங்களைத் தேடுகின்றேன்......
துளைகள் இல்லாத மூங்கிலில்
இசையை சுவாசிக்கின்றேன்........
அல்லும் பகலும் உன் அருகில்
இருக்க ஆசைதான் கண்ணா.........
நீயோ எட்டுத்திக்கிலும் உன்னை
எதிர்பார்த்து ஏங்க வைக்கின்றாய்..........
கண்ணா உன்னை
என் கண்ணெதிரே பார்க்கின்றேன்.......
தொட முயல்கின்றேன், முயன்றாலும்
தூரம் தூரம் ஏன் செல்கின்றாய்............?