நாட்டுப் புறப்பாட்டு
கதைக் கரு : மாமன் அத்தை மகளை விரும்புகிறான் ஆனால் அவள் வீட்டில் அவளுக்கு வேற மாப்பிளை தேட்ராக !!
அவன் :
வாடை காத்து அனலடிக்க !!
ஆத்துத் தண்ணி சிலுசிலுக்க
ஆய்த மகா நீயும் வந்தா
பட்டாம்பூச்சி சிறகடிக்கும் ! (தன்னானே நானே தானே தன்னானே நானே )
அவள்:
வேட்டியதன் மடிசுகிட்டு
மல்லுக்கு தான் போற மாமா
தாலியதான் கட்டி நீயும்
வேலியத்தான் தாண்டு மாமா !( தன்னானே)
அவன் :
கூற சீல வாங்கியாந்தேன்
பொங்க சீரும் வாங்கியாந்தேன்
உன்காத்தாலும் சீண்டலியே
அப்பனும் தான் மாறலியே !! (தன்னானே)
இறுதியாக அவள் :
சிங்கபூரு மாப்பிளை தான்
அள்ளிகிட்டு போக போறான்
விட்டுபுட்டு நிக்காதய்யா!
ஊற விட்டு ஓடி போலாம் !! (தன்னானே)
- எங்கூரு நினைவுகளுடன் !!