மழைப் பேச்சு
மழை பெய்த மாலை நேரத்தில்
சாலையோரத்தில்
தேங்கி நிற்கும் மழை நீரை
... கடந்துபோகக் காத்திருக்கிறாள்
கன்னியொருத்தி
கையில் ஒற்றைக் குடையுடன்..
வாகனங்கள்
வாரி இரைக்கும் நீருக்கு
பயந்தவளாய்
குடைக்குள் தன்னை
மறைத்து,
உதடு சுழித்து,
கண் சிமிட்டி,
அவள் சிணுங்கிய
நொடியில்
உலகின்
அழகியல் உவமைகளனைத்தும்
ஊமையாகிப் போனதேனோ..?