அழகான நாட்கள்...
உன்னை கண்டு நட்பாய்
நின்ற இடமெல்லாம் இப்போதும்
ரசித்து பார்க்க சொல்கிறது என் மனம்...
தேங்கி கிடக்கும் நினைவுகளோடு
உன் நினைவையும் கலைத்து பார்த்து
ரசிப்பதுண்டு... முடிவில்லாத பயணமாய்
உன் நினைவுகளும் தொடர்கின்றது...
இன்னமும் நினைப்பேன் உந்தன் அன்பினை....
ஒருநாள் என் முன் வந்து ஆடோகிராப்
நோட்டில் எனது கையெழுத்தினை கேட்டாய்,
அப்போது நினைக்கவில்லை அது நான்
உன்னை காணும் கடைசி நாளென்று...