நான் காத்திருக்கிறேன்...

நான் காத்திருக்கிறேன்...

இயற்கை சூட்டை
இழந்து விட்டு
இரண்டு நாட்களாய்...

எங்கேயோ
இருந்து வரும்
எனது மகனுக்காய்...

என் காதில் விழுகிறது...

யாரோ பேசிக்கொள்வது
.................. ஐ
அதிக நேரம் காக்க வைக்க
கூடாதென்று...

உறவுகள்
கூடி
உரிமைகள் பேசியது...

என் மேல்
விழுந்து
அழுவது கூட வலிக்கவில்லை...

தனியே நின்று
எனை நான்
பார்க்கிறேன்...
காத்திருக்கிறேன்...

என் மகன்
கடைசியாய்
என் முகத்தை
பார்த்துவிட மாட்டானா
என்ற ஏக்கத்தோடு...

வெளிச்சப்பேழைக்குள்...

எழுதியவர் : இவன் (28-Dec-11, 8:52 pm)
Tanglish : naan kaathirukiren
பார்வை : 491

மேலே