கானா காணும் காலங்கள் ! ( கல்லூரி நண்பர்களுக்கு சமர்பணம் )
நாங்கள் கானம் பாடும்
நல்ல வானம் பாடிகள்
கல்விதான் எங்கள் எதிர் கால
வாழ்க்கைக்கு வேலி என்று
சோகத்தையும் சந்தோசமாய்
நாங்கள் இங்கே சுவாசித்தோம்
எங்கள் சந்தோசமே அன்று
நல்ல வைகறை தோற்றம்
கல்லுரி காலங்களில் நல்ல
அறிவு கொண்டோம் - இன்னும்
அன்பு பகிர்வுக்கு நல்ல
நண்பர்களை பெற்றோம்
சந்தோஷ வானில் பறந்தோம்
உல்லாச பறவைகளாக சிறகடித்து
கல்லூரியில் கற்ற கல்வியும்
பெற்ற நண்பர்களும்
நாங்கள் கொண்ட பகிர்வுக்கு
கிடைத்த நல்ல பரிசு
கல்லூரி காலம் -இன்னும்
கானா கொண்ட பட்டம்
இன்றும் எங்கள் நினைவில்
மங்காத அந்த பொற்காலம் !
-ஸ்ரீவை.காதர் -