எனக்கெல்லாமே நீதான்!

புயலே நீதான்
அழைக்காத (செல் போனில்)
என்னை கடிந்துகொண்ட
வேளைகளில்...

மழையே நீதான்
மன்னிப்பு கேட்கும் என்னை
மருண்ட விழிகொண்டு பார்த்த
வேளைகளில்...

இசையே நீதான்
என் மடி சாய்ந்துகொண்டு
நினைவுக் கடலில் நீந்திய
வேளைகளில்...

நெருப்பே நீதான்
என்னை உயிரோடு எரிக்கிறாய்
பிரிந்த உன்னை நான் நினைக்கும்
வேளைகளில்...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (4-Jan-12, 5:12 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 488

சிறந்த கவிதைகள்

மேலே