என்னை யாரென்று கேட்காதே!
ஏன்? எதற்கு?
என்று கேட்காதே!
என்றாவது, யாராவது,
பதில் சொல்லக் கூடும்...
யார்? எங்கே?
என்றும் கேட்காதே!
யாராவது, எங்கேயாவது,
வாய் திறக்கக் கூடும்...
எப்படி? எப்பொழுது?
என்று கூட கேட்காதே!
அவனோ, இவனோ, நான்
இறந்த செய்தி சொல்லக் கூடும்...
யாரவன்? என்று மட்டும்
கேட்டு விடாதே!
புதைந்த நான் எழுந்து வந்து,
உன்னை கொன்றுவிடக் கூடும்!