அவள் இருக்கும் இடத்திலே ...

நான் எழுதும் எழுத்துக்கள் எல்லாம்
அவள் பெயரில் உள்ள எழுத்துகளே ...

நான் பேசும் வார்த்தை எல்லாம்
அவள் கொடுத்த வார்த்தைகளே ...

நான் சுவாசிக்கும் இடம் எல்லாம்
அவள் இருக்கும் இடத்திலே ...

எனக்கு மெய்யாய் இருப்பவள்
உயிராய் கலந்தவள்
உலகிற்கு அறிந்தவள்
இறைவனை ஆண்டவள்
அவளே எந்தன் உயிர் மொழி
நான் நாளும் பேசும் தமிழ் மொழி ...

எழுதியவர் : boopathirajatharamanagalam (9-Jan-12, 11:40 am)
சேர்த்தது : boopathirajatharamangalam
பார்வை : 238

மேலே