போராளி
மண்ணுலகில் பிறந்த
மனிதர் எல்லாம் போராளி
பிறந்த மறு பொழுதே
துவங்குகிறோம் போராட
முதலில் மூச்சு விட
பின்பும் மூச்சுவிட
இரண்டிற்கும் இடைப்பட்ட
இடைவெளியும் போராட்டம்
போராளி வாழ்க்கை எல்லாம்
போராடி தீர்கின்றோம்
போராடும் நேரம் மட்டும்
பூமியிலே வசிக்கின்றோம்
போராட்டம் முடியும் மட்டும்
பூமியையே புசிகின்றோம்
ஆண்டவன் தந்த
அற்புதமான பூமியினை
அழிப்பதிலே
ஆணவம் கொள்கின்றோம்
இருக்கும் மட்டும் இருக்கட்டும்
இனி ஒரு யுகம் காண
இனிமையாய் நாம் வாழ
போராட்டம் தொடரட்டும்
பூமியிலே நாம் வாழ.
போராடி பழக்கப்பட
போராளி நாம் எல்லாம்
போர் தொடுப்போம்
பூமியிலே
அன்பு என்னும்
ஆயுதத்தால்
அரவணைப்போம் ஆருயிராய்
அன்னை பூமிதனை
அலங்கரிக்க ஆர்பரிபோம்
அகிலத்தையே ஆழ
அச்சுறுத்தும் ஆயுதமாம்
நெகிழி (பிளாஸ்டிக்) தனை
ஒழித்திடுவோம்
ஒளிமயமாய் நாம் வாழ.