தமிழை விரும்பும் வறுமைத் "தீ"
தமிழே மொழியே அழகே அமுதே
அறமே அறிவே ஆதிச்சுடரே
தனமே தவமே தவழ்வாய் நாவில்
வருவாய் உதிர்வை செவ்விதழில்
ஒளிர்வாய் வளர்வாய் நிறைமதி போலே
அருள்வாய் மலர்வாய் தமிழே நெஞ்சில்
எத்துனை பெருமை இருந்தும்
எந்தமிழ் வறுமையில் வருந்தும்
தரணிக்கே நீதி சொல்லும்
தாளா பசி தமிழை வெல்லும்
தமிழ் பாடும் புலவனைக் கொல்லும்
கற்ற தமிழால் வளமை ஊரிற்கு
கற்றதனால் பயனில்லை வீட்டிற்கு
பாசுரம் பாடினால் பசியும் போகுமோ
பசியால் தமிழ் இனி மெல்லச்சாகுமோ
தமிழ் மொழியின் வளமை கண்டு
"செம்மொழி" எனும் மகுடம் உண்டு
மகுடம் கொண்டு வறுமை மீளுமோ
மகுடம் சூடியே தமிழ் மாளுமோ
எவ்வனம் மாறா தமிழ்த்தாயே
வறுமைத் தீயில் வைரம் நீயே