தாடிகளுக்கும் மீசைகளுக்கும்
என் வர்கத்தின் வலிமையை
உலகிற்கு புரிய வைத்த
அந்த ஜெர்மானிய தாடிகளுக்கும்
சும்மாகிடந்த நமக்கு
சுயமரியாதையைச்சொல்லிக்கொடுத்த
அந்த ஈரோட்டு தாடிக்கும்
தனியொருவனுக்குணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோமென
மனித நேயக்குரலெழுப்பிய
அந்த எட்டயபுரத்து முறுக்கு மீசைக்கும்
வீர சுதந்திரம் வேண்டி நின்றாற்பின்
வேறொன்றும் கொள்ளாது
தூக்கு கயிற்றை முத்தமிட்ட
அந்த பஞ்சாப்பின் வீரமீசைக்கும்...
என் கவிதைகளனைத்தும் சமர்ப்பணம்.