.........மீண்டும் அந்த காலம் ...........

கோபப்பட ஒன்றும் இல்லை
பழி போட யாருமில்லை

புயல் தந்த சோகமது
சொல்லி இங்கு மாளாது

கம்பியெல்லாம் கீழ கெடக்கு
கரண்டு மரமும் ஒடஞ்சி கெடக்கு

ஊரெங்கும் விளக்கில்லை
ஆறு மணிக்கே வெளிச்சமில்லை

தண்ணிருக்கு படும் பாடு
தாங்கலடா நம்ம வீடு

டி.வி . பார்த்து நாளாச்சி
மெகா சீரியலும் மறந்து போச்சி

செல்லுக்கு உயிர் போச்சி
சொந்தங்கள் விலகி போச்சி

குழு குழுவா வர்றாங்க
கூடி கூடி பேசறாங்க

மறியல் பண்ண போனவங்க
மண்ட ஒடஞ்சி வந்தாங்க

பொங்கலும் கனவாச்சி
போகி பெரிய போகியாச்சி


சத்தமில்லா பொழுதுகளும்
கை விளக்கில் இரவுகளும்

சற்றே எட்டி பார்த்தேன்
என் இளமை காலத்தை ...........!

எழுதியவர் : வீ.ஆர்.கே.(புதுச சேரி ) (11-Jan-12, 7:40 pm)
பார்வை : 312

மேலே