காதலையுன் விழியால் நெஞ்சில் வரைந்தாய்

வானத் தினையிரவு வந்துமெல்ல முத்தமிட
மௌனமாய்மஞ் சள்நிலாவும் மாலையெழி லில்வர
ஆதவன்செவ் வோவியத்தை அந்திவானில் தீட்டிட
காதல் வரைந்ததுன் கண்

-----இரு விகற்ப இன்னிசை வெண்பா
அடியெதுகை ----வான மௌன ஆத காத

சீர்மோனை 1 3 ஆம் சீரில் வா வ மௌ மா ஆ அ கா க

வானத்தை மெல்லிரவு வந்துமெல்ல முத்தமிட
மௌனமாய்மஞ் சள்நிலாவும் மாலையெழி லில்வரவும்
வானம்மெல் லக்கவிந்து வண்ணக்கோ லம்போட
மௌனமாய்நீ காதலையுன் விழியால்நெஞ் சில்வரைந்தாய்

ஒரே அடி எதுகை --வான மௌன வான மௌன

சீர்மோனை 1 3 ஆம் சீரில் ---வா வ மௌ மா வா வ மௌ வி
அமைந்து அடிதோறும் காய் காய் காய் காய் வாய்ப்பாடு
அமையப்பெற்ற கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-24, 6:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே