மறுபடி முதல்முறை சுதந்திரம்

அக்கம்பக்கம் திரும்பிப்பார்த்தால்
ஏழையின் அவலம் சிரிக்கிறதே
அறுபத்தைந்தாண்டாகிய பின்னும்
சுதந்திரம் இவரிடம் முறைக்கிறதே
ஆயிரம் கட்சிகள் வரிசையாய் ஆட்சியில்
அரசின் ஆணைகள் இடுகாட்டைத் தேடுது
நல்லவை இவரிடம் சேரும்முன்னே
பலர்கைஏனோ இவர்தட்டில் ஆடுது
முதலாய் அன்றிவர் தன்னுரிமைக்காய்
வீரமாய் குருதியை தானம்விட்டார்
இங்கு வயறுநிறைந்தவன் கையைநிரப்ப
விதியெனக்குருதியை ஏலம் விட்டார்
அன்று வந்தேமாதரம் என்ற குரலோ
இங்கிலாந்தையே ஆட்டி உலுக்கியது
இங்கு லஞ்சமேஆயுதம் என்றநிலைமை
இந்தியாவையே சிலர் கையில் விற்கிறது
விழித்தெழு தோழா தோழியரே
உடனடியாய் பாரதம் மீட்டிடவே
அறிவோம் லஞ்சமே உயிர்க்கொல்லி
அதைவேருடன் அழித்தால் வாழ்வில் ஒளி!!!
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (12-Jan-12, 11:20 am)
பார்வை : 212

மேலே