பதில் சொல்லுங்க
விடுமுறை
நாளை
விருப்பம் இன்றி,
என் அறையில் ,
உன் நினைவாக
கழித்த நாட்கள் !
உனக்காக
பேருந்தை தவற
விட்ட ,
பேரின்ப இழப்புக்கள் !
கல்லூரியில்
நான்
வாங்கிய பரிசை
முதலில்
உன்னிடம் காட்டி
நெகிழ்ந்த
இன்பமான தருணங்கள் !
மகிழம் பூ
மரத்தடி இல்
அமர்ந்து பேசிய
ரம்மியமான உணர்வுகளின்
தாக்கங்கள் !
ஒரு நாள்
இரவு
உனக்கு போன்
செய்து
காசில்லாமல்
அவதி பட்ட
அழமான நினைவுகள் !
நீ
வராத போது
கல்லூரியில்
நான்
காரணம்தேடி
அலைந்த
நிமிடங்களின் நிஜங்கள் !
இவை
எல்லாம்
மனதில் பொதிந்திருக்க ,
பிரியும்
போது கூட
உன்னிடம்
எதோ சொல்லவந்து
சொல்லாமல் போன
மனதிற்கு
என்ன சொல்லி
ஆறுதல் சொல்ல ?
உன் மீது
காட்டிய
அன்பு
காதலா?