ஏனோ....
எனக்கானவன் யார் என்பதை
என்கண்கள்தான் கேட்கின்றதே
யாரோ யாரோ அவன்...
என் இதயத்தை பறிக்க போகிறவன்
யார் என்பதை என் உள்ளமும் தேடுகின்றதே
ஏனோ இந்த மாற்றம்...
நான் மழையில் ஆடும் போது
குடையென வந்திடுவானா..?
வெய்யிலில் திரிந்திடும் போது
நிழலென நின்றிடுவானா..?
தினம் எழுதும் கவியாய் -என்
உள்ளம் கவர்ந்திடுவானா..?
மாற்றம் இல்லா அன்பை
எனக்கு மட்டும் தந்திடுவானா...?
காலை திட்டி சென்றால் என்ன,
மாலை குட்டி புன்னகை போதும்...
கொட்டி கொடுக்கும் அன்பை
உனக்கு மட்டும் தருவேன் நானும்....