விடைதெரியவில்லை இறைவா ?...

இறைவா
உன்னிடம் ஒரு கேள்வி
விடைதெரியா மனிதர்கள் மற்றும்
மகான்களுக்காக...

மரணத்தை - நீ
எப்படி நிச்சயிக்கிராயென்று
நான் கேள்விப்பட்டவரை
பாவம், புண்ணியத்தின் அடிப்படையிலென்று
என்ன கணக்கென்றே தெரியவில்லை
இறைவா உன் நியதி !...

பாவம் செய்கிற கொலைகாரன்
கொள்ளைக்காரன் -
வஞ்சம் வைப்பவன் , துரோகம் செய்பவன்
இரக்கம் இல்லா -
அரக்க குணமுடைய இவர்கள் எல்லாம்
சந்தோசமாக நீண்ட காலம் உயிர் வாழ ...

ஒரு பாவமும் செய்யாதவர்கள்
ஒரு புண்ணியமும் செய்ய வாய்பில்லா
பிறந்த குழந்தைகள்
வாழ வேண்டியவர்கள் என்று
இவர்கலெல்லாம் சாக காரணம் என்ன ?
அதிலும் கொடுமை - ஒரு

தாய் கருவுற்றப்போது கிடைத்த சந்தோசத்தையும்
பத்து மாதம் பார்த்து பார்த்து பாதுகாத்த -
குழந்தையை பத்தே நொடிப்பொழுதில்
தாயின் கருவரையையே கல்லறையாய் மாற்றி
கருவரையை தவிர வெளிச்சத்தையே காணாமல்
பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாயின்
முகத்தைகூட பார்க்க வாய்ப்பில்லாமல்
வயிற்றிலே இறந்தே பிறக்கிறதே - இதுதான்
உன் பாவப் புண்ணியக் கணக்கின்
நியதியா இறைவா !...

முற்றும் துறந்தோரை கேட்டால்
முன்னோர் செய்த பாவம் என்பர்
முன்றொரு ஜென்மத்திலோ
மூன்று, நான்கு தலைமுறைக்கு முன்போ
முட்டாள் தனமாகவோ , மூர்க்க குணமாகவோ
மூடநம்பிக்கையிலொ யார் யாரோ
செய்த தவறுக்கு , ஏதும் செய்யாதவர்கள்
தண்டனை அனுபவிப்பது
எந்தவிதத்தில் நியாயம் ...

ஒன்றும் புரியவில்லை இறைவா
மரணத்தை - நீ
எப்படி நிச்சயிக்கிராயென்று !

இறைவா
கண்களை திறந்துப் பார்
பாவிகளையும்
பாவப்பட்டவர்களையும் !...

மரணம் புதிரே .....

எழுதியவர் : சுரேஷ்.G (14-Jan-12, 5:49 pm)
பார்வை : 288

மேலே