இரை தேடும் பறவை

வாழ்ந்தது போதும் என்று எண்ணுகிறேன்
வாழ்வின் அனுபவங்கள் தந்த பாடங்களால்..
எனக்கு சுதந்திரம் அளிப்பதாக கூறி
அவரவர் விருப்பங்களுக்கு ஆட்படுத்தும்
பொய்யான சுதந்திரம் வேண்டாமே..

இருப்பவர் மனம் கோணாமல் அனுசரிப்பதால்..
என் மனம் கோனுகிறது என்பதை என்று உணர்வாயோ..
தினம் தினம் வலி என் மனதில்..
வழிக்கு மருந்தும் இல்லை முடிவும் இல்லையோ..

நான் மனிதப்பிறவி தான் கடவுள் அல்ல..
தன்னை துன்பப்படித்துக்கொண்டு தன்
பிள்ளையை துன்பமரியாது வளர்த்த பெற்றோர்..
இன்று சந்தோசத்தில் பிள்ளையின் நல்வாழ்வை
கண்டு..

அந்த சந்தோசத்திற்காக நான் நடிக்கிறேன்
மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவதாய்..
இன்று மட்டும் அல்ல என் வாழ்வின் இறுதிவரை
நடிப்பேன் அவர்களின் நீண்ட ஆயுள்க்காக..

கூட்டு வாழ்வு சுகம் தான் தன் சுயமரியாதைக்கு
இலக்கு வந்தும் சகித்துக்கொண்டால்..
காலம் மாறிவிட்டது மனிதனும் மாறிவிட்டான்..
கூண்டில் அடைபட்டு வாழ விருப்பமில்லை..

ஒவ்வொரு செயலுக்கும் அனுமதி கேட்க வேண்டும்..
அனுமதி பெறா செயலுக்கு பூசி முழுக வேண்டும்..
இது என்ன பள்ளிக்கூடமா..வாழ்க்கை அல்லவோ..
நீ விதித்த பாதையில் என்னால் செல்ல இயலாது..
நான் வகுத்த பாதையில் செல்ல விரும்புகிறேன்..

சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவருக்காக
நீ அர்ப்பநிப்பாயனில் உன் வாழ்கையை
உனக்காக வாழவில்லை என்று அர்த்தம்..
உனக்கான வாழ்க்கை உன் கையில்..
தனித்து நின்றால் ஜெயித்துவிட முடியாதா..

தள்ளி நின்று பார்..
உன் தொலைவே உன் வெற்றி..
கூட்டில் உள்ள பறவை யாவும் சிறகை விரித்தால்
தான் பறக்க முடியும்..
இரை தேடி தன் பசியை தீர்த்துக்கொள்ள முடியும்..

என்றும் இரைக்காக காத்திருக்கும் பறவையாய்
இராதே..
இரை தேடும் பறவையை இரு..
மோகமில்லா மேகமாய் வாழும் என் தோழிக்காக..
சமர்ப்பிக்கின்றேன் இந்த கவிதையை..

எழுதியவர் : priyaprakash (18-Jan-12, 1:39 pm)
சேர்த்தது : priyaprakash
பார்வை : 291

மேலே