ஈழம் பாடாத இதயம் ...!

ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு

தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்

பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்

மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்

மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்

விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்

என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்

எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்

சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்

ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி

ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு ஈழத்துயிர்கள்

எழுதியவர் : hishalee (18-Jan-12, 2:38 pm)
பார்வை : 238

மேலே