தோழி..
தோற்றுக்கொண்டேதான்
இருக்கிறேன் உன்னிடம் ..
வெற்றிபெற முடியாமல்
அல்ல விரும்பாமல்!!
நட்புக்கு இலக்கணமாய்
உன்னை நினைத்ததனால்தானோ
என்னவோ நான்
விளங்கிக்கொள்ள
முடியாதவலாகவே
நீ இருக்கிறாய்!!
உணர முயலாமலேயே
என் நட்பு மெய் இல்லை
என்று பொய்யாக
எண்ணியதேனோ??
துடித்து கொண்டிருக்கிறதடி
நீ தூக்கி எரிந்து விட்டு
சென்ற என் இதயம்..
வாரி எடுக்க கரம்
இல்லாததால்!!
முயற்சி திருவினை
ஆக்கவில்லையடி ...
சோர்ந்து விட்டேன்
என் அன்பை உனக்கு
உணர்த்த முயன்று!!
முடியாதுதான் இருந்தும்
முடிவு செய்து விட்டேன்
உன்னை விட்டு விலக ..
ஆம்... அருகில்
இருந்தபோதுதான்
பிடிக்கவில்லை என்னை
விலகி இருந்தாலாவது
புரிந்துகொள்ளா மாட்டாயா
என்ற நப்பாசைதானடி!!
நான் வேண்டும் என்று
தோன்றினால் கை
கோர்த்து நடக்க
வா என்னோடு...
இலையென்றால்
கையில் மலரோடாவது
வா என் கல்லறைக்கு!!..