நினைவில் அவள் மலரும் போது ...
கண்கள் இரண்டும் வண்டினம்
கனியிதழோ மதுக்குடம்
பூவுடலோ பொற்குடம் -அவள்
காணக் கிடைக்காத பொக்கிஷம் !
இதழ் மலர்ந்தால் உதிரும் சிரிப்பு
இவள் சிரித்தால் சிதறும் முத்து
சிதறிய முத்து காற்றில் கலந்து
காதில் கேட்டது கவியாகம் - அந்தக்
கவியால் எந்தன் மனமும் அன்றே
மயங்கியது அவள் வசமாக !
என் கனவில் அவள் தேவதை
தருகின்றாள் தினம் போதையை
நேரில் அவளொரு தாரகை - அவள்
நினைவோ மயக்கும் மல்லிகை !
ஏட்டில் எழுதாத ஒவியம் - அவள்
எழுத்தில் வடிக்காத காவியம்
கவிஞன் படைக்காத அற்புதம் - அவள்
இதயம் எனக்கே அர்ப்பணம்.
ஏன் கனவுக்கு அவளே துணையானாள்
கருத்துக்கு அவளே பொருளானாள்
என் நினைவில் இன்றும் மணக்கின்றாள் - அவள் நினைவைக் கவியாய் படைக்கின்றேன் !