உன் வீட்டு கண்ணாடி
நான் ஒன்றும்
அழகானவன் அல்ல ...
இருந்தும் நாள்தோறும்
நீ என்னை பார்க்க மறப்பதில்லை...
புத்தாடை வாங்கினாலும்
புது நகை வாங்கினாலும்
முதலில் என்னிடமே கட்டிக் கொள்கிறாய்...
காரணங்கள் தெரியாமலே
காத்திருக்கும்
உன் வீட்டு கண்ணாடி