"சொல்ல மறந்த க{வி}தை"

===============================================
சூழலின் சூழ்ச்சியால் சூழ்நிலை மாறிப்போன
வெளிநாடு ஏறிப்போன அண்ணன் மார்களுக்கும்
அவர்களை பிரிந்து வாடும் அண்ணி மார்களுக்கும் இக்கவிதை ஓர் அர்ப்பணம்..!
===============================================
அல்லும் பகலும் காத்திருந்து,
அங்கும் இங்கும் பார்த்திருந்து,

அகல் விளக்கு ஏந்தி வந்த
என் குலவிளக்கு நீயன்றோ....

உன்னை பார்பதற்கு முன்வரை
கோவில் குளம் சுத்தவில்லை,
உன்னை பார்த்து உன் பின் வர
கோவில் குளம் பத்தவில்லை....

என் வீட்டு தெருப்பக்கம் நீ வர,
உன் கையோடு தாவணி துணை வர,
உன் கோலவிழி பார்வைதன்னில்
தொலைந்து வருகிறேன் வர...வர...

காலமகள் கண் திறந்தாள்- நான் உன்
கைப்பிடிக்க நமக்கு கல்யாணம் ஆச்சு,
அதுவரை என்னிடம் குடியிருந்த
கவலையெல்லாம் கண்காணாமற் போச்சு...

நம் வாழ்வதை பார்த்த ஊர்-பெருமை பேசின,
அவ்வப்போது வறுமை நம் பக்கம் வீசின...

அரை மனதோடு வந்து விட்டேனடி
உன்னை பிரிந்து நானிங்கே,
தினமும் வாடி தவிக்கிறேனடி
உன்னை பிரிந்ததால் தானிங்கே....

நங்கை உனை பார்த்து நாள் பல ஆனதடி,
நாட்குறிப்பு காகிதமும் நலிந்தும் தான் போனதடி...

மகிழுந்து{car} பயணம் கூட மகிழ்ச்சி தரவில்லை,
மண் தரையில் உன்னோடு மணிகணக்கா
பேசும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை...

அம்மா பார்த்து வெச்ச அழகான பெண் தான் நீ
அடுத்த ஜென்மத்திலும் நீ தான் என் பெண்டாட்டி...

உன்னை பிரிந்து வந்த நாள் முதலாய்
எத்தனை நாள் பாக்கலையோ,
என் இதயம் எழுப்பும் இருமல் சத்தம்
உன் காதுக்கு கேக்கலையோ....

உன்னை பிரிந்து துணிந்து வந்துவிட்டேனடி
குடும்ப தலைவன் என்ற பேருக்காக....
உசுரை கையில் பிடித்து கொண்டு உழைத்து தீர்க்கிறேனடி உன் கைப்பிடி சோறுக்காக...

இந்த தனிமை, அதனால் வந்த கொடுமை,
களவு போன கனவும், நசுங்கி போன நனவும்
வாட்டி எடுக்குமென்னை தினமும்,
உன் சேலை போர்வையினால் தான்
நிம்மதியாய் உறங்குகிறது என் மனமும்....

அம்மாவின் பிரிவு நான் பள்ளிக்கூடம்
போனதும் பழகித்தானே போனது,
என் ஆச மன்னவளே உன்பிரிவு-கடல் தாண்டி
வந்தாலும் கரையிறங்க மறுக்குது.....

காலமது கனியட்டும் உன் ஆச மாமன்
நான் வருவேன், அன்பு முத்தமொன்னு
உன்ன கட்டியணைத்து தான் தருவேன்...
கடிகாரம் பார்த்து காத்திருடி என் கண்ணே,
காலை கதிரவன் கண்விழிக்கும் முன்னே,
வருவேன் உன் முன்னே.....!

இளமையை இழந்தாலென்ன
முதுமையில் முழு இன்பம் காண்போம்..!
===============================================
அந்த "அண்ணல் காந்தி" இங்கு வந்த வெள்ளையர்களிடம் நாட்டுக்காக
சுதந்திரம் வாங்கினார்..!
இந்த அண்ணன் "காந்தி" இங்கிருந்து அங்கு சென்று தன் சுதந்திரத்தை இழந்தார்...
"இவரும், இவரை போன்றோரும் என்னை பொறுத்தவரை தியாகி தான்"
===============================================

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (21-Jan-12, 9:39 pm)
பார்வை : 495

மேலே