மன்னிப்பு எப்போது..?
உன்னை அன்று அண்ணாவென்று
அழைக்கவைத்த காரணத்தினால்தானோ என்னவோ...
எல்லா பெண்களுமே என்னை
அண்ணா என்றே கூப்பிடுகின்றனர்..!
மன்னித்துவிடு விமோசனம் தந்துவிடு
என் இளமை சிநேகிதியே..!
உன்சொந்தம் என்சொந்தம்
உன்பந்தம் என்பந்தம்
உன்னுறவு என்னுறவு
எல்லாமுமாய் என்மனதை
மாற்றியாதே நட்பு தடைசெய்ததே...
என்செய்வேன் என் இளம்பருவ நேசமே..!
நீயும் சொல்லவில்லை
நானும் சொல்லவில்லை
சொல்லாமலே தொடர்ந்தோம் நாம்..
உன்னை சொல்லவைத்து
செயலிழந்தேன் நான்..!
நீயும் அறியவில்லை நானும் அறியவில்லை
நாம் அறியும்தருணம் ஊர் அறியவில்லை
ஊருக்காக உதட்டளவில் மட்டுமே
நம்முறவு இப்போது..!!
எனக்கு மன்னிப்பு எப்போது..!!