நட்பை உணர்ந்தவன் நாத்திகன் அல்ல...!
வெளியில் பார்த்தேன் - அவனைக்
காணவில்லை - என்
இதயத்த்தில் பார்த்தேன் - என்னைக்
காணவில்லை - அவன்...!
அவன் - வேறு யாருமல்ல.....!
எனது ஆருயிர் நண்பன்...!
நட்பு - அது
வந்து போகும் வானவில் அல்ல!
நம்மை வாழ வைக்கும் வரம்....!
கழுத்தில் கை போட்டுக் கொள்ளச் சொல்லும்..!
மூன்றாவது தோள் முளைக்க வைக்கும்...!
முன்னேற வைக்கும்....! சுவாச மூச்சாய் மாறும்...!
நட்பு - இறைத் தன்மை உணரும் இனிய உணர்வு.!
நட்பை உணர்ந்தவன் நாத்திகன் அல்ல...!
நட்பை உணராதவன் மனிதனே அல்ல...!