கோபம்...,

என்னுள் ஏன் வந்தாய் !
குழந்தை போல இருந்த என்னை
நீ வந்து மாற்றினாய்...,

அனைவரிடமும் அன்பை மட்டுமே
பகிர்ந்து கொண்டேன்...,
என்னுள் நீ வரும் முன்பு

இப்போது "கோபமாகிய" உன்னை மட்டுமே
காட்டுகிறேன்...,

நீ பிரவேசிக்க நான் தான் கிடைத்தேனா!

உன்னால் அனைத்தும் இழந்தேன்...,

நான் உன்னிடம் கேட்பது நான் இழந்த எதுவும்
நீ மீட்டு தர வேண்டாம்...,

எவ்வாறு எனக்கு தெரியாமல் வந்தாயோ
அவ்வாறே சென்று விடு...,

எழுதியவர் : poomu (26-Jan-12, 2:19 pm)
பார்வை : 298

மேலே