மண்

மண்ணை தின்றபோது
தலையில் தட்டினால்
அன்னை -- வயது இரண்டு

மண்ணில் விழுந்து
விளையாடிய போது
முதுகில் அடித்தார்
தந்தை -- வயது நான்கு

மண்ணில் புரண்டு
சண்டையிட்டபோது
பிரம்பால் தட்டினார்
ஆசிரியர் -- வது எட்டு

பாதம்ப்பட்ட மண்ணை
எடுத்து பார்வை
கண்ணில் ஒத்தினேன்
தலையில் தட்டினால்
பாவை -- வயது பதினெட்டு

ஆயிரம் சதுரடி
செம்மண் நிலம் - அங்கே
அழகிய வீட்டின்
அடித்தளம் ஆரம்பம் ..
பூமி பூசை மண் எடுத்து
பூசினேன் நெற்றியில்
தொளில் தட்டினால்
மனைவி -- வயது முப்பத்தி எட்டு

பிஞ்சு பேரனை
நெஞ்சில் சுமந்த போது
அவன் வாயில் உள்ள
மண்ணை தட்டினேன்
-- வயது அம்பதிஎட்டு ...

என் வருடங்களுக்கு மட்டும்
வயதகிவிட்டது!!

காலச்சக்கரத்தின்
கடைசி நாட்கள் ..

.நெற்றி சுருக்கத்தில் விதி
எழுதி வைத்த அத்தனை
புதிருக்கும் விடை சொல்லிவிட்டது ..

அனுபவத்தின் மொழியாய்
தொளில் சுருக்கங்கள் ...

கடிகார முள் கூட
கடைசி நொடி இதுவோ - என்று
கலங்கி நிற்கிறது ...

வானத்தில் ஒருநாள் நிசப்தம் ..
முகில் கூட்டம் தூதுவிட்டு
கீழைகாற்று மேலெழும்புகிறது ...

என் கடைசி மூச்சை சுமந்துகொண்டு ...

மேகத்தை தொட்டகாற்று
கிழேகுதித்து சேதி சொல்கிறது -- ஊருக்கு உதரணமாக வாழ்ந்த மனிதன்
வானுக்கு பயணிக்கிறான் ...

இரண்டு வயதில் நான்
தின்ற மண் இருகரம் கூப்பி
அணைத்துக்கொண்டு
அமைதியாக கேட்கிறது ...

அடுத்தது யார் ? ...

எழுதியவர் : (26-Jan-12, 3:22 pm)
சேர்த்தது : jayamkondan
Tanglish : man
பார்வை : 189

மேலே