கண்ணீர் உனக்கு சொல்லிவிடும்

நேற்று வரை நினைக்கவில்லை என்னுள் காதல் வரும் என்று.

வந்தும் கூட விளங்கவில்லை காதல் என்று.

விளங்கியும் தெரியவில்லை நான் காதல் கொண்டது உன்னிடம் என்று.

தெரிந்தும் கூட சொல்ல இயலவில்லை "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று.

என் கண்ணீர் கூட கண்ணீர் வடிக்கிறது என் இன்றைய நிலையை கண்டு.

இன்னும் ஒரு வாய்ப்பு உன்னை சந்திக்க கிடைத்தால் சொல்லிவிடுவேன் என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் என் காதலை..

அன்று நான் வார்த்தை இல்லாமல் தவிக்க நேரிடலாம்.

ஆனாலும் என் கண்ணங்களில் உருண்டோடும் கண்ணீர் உனக்கு சொல்லிவிடும்.

எழுதியவர் : லலிதா.வி (27-Jan-12, 7:53 pm)
பார்வை : 289

மேலே