எந்நாள்????

எந்நாள்?
உலகத் தாய் பிடித்திருக்கும்
பசும்போர்வைக் குடைக்குள்
இலைமனிதர்கள்
முகில்நண்பனை வாவென்று
அழைத்திட்ட போதினிலும் உதிரியாய்
கரும்புகையாய் சுற்றுப்புறம்
மாசுபட்டபோதினில் எவர் இங்கு
அழைத்தால் வருவர்!
தன் நிழலைக் கூட தாரை வார்த்து
மண்ணுக்காக வாழும் மனோபாவம்
கொண்ட மரத்தைவிட
மனிதன் ஏன்
சுயநலமாய் மாறிப்போனான்?
சுயநலமில்லா மரத்தினைப் போல
பொதுநலம் கருதிவாழும் நாள்
எந்நாளோ!

எழுதியவர் : (28-Jan-12, 8:15 am)
பார்வை : 200

மேலே