நிலவு

நிலவு
வானப்படுக்கையில்
வந்துதித்த
வெள்ளைரோஜாவே!
நட்பு வேண்டி
முகிலவன்தான்
அருகில் வர
முகத்தை மட்டும்
நீ ஏன் மறைத்தாய்?
பகல்முழுதும் உறங்கிவிட்டு
இரவில் மட்டும்
நடனமாடும்
பளிங்குநிறத்து
கண்ணாடி சலவைக்கல்லே!
வான் குழந்தையை அழகுபடுத்தி
வட்டமாய் வந்துதித்த வெள்ளித்தட்டே!
புவித்தாய் பெற்றெடுத்த வெள்ளைப்பந்தே!
என்னோடு விளையாட
உன்னைத் தருவாயா?
மனத்தூய்மை மனிதனுக்கு அவசியம்
என்றே உணர்த்திட
வட்டமாய் வலம்வரும் வெண்ணிலவே!
மக்கள் வட்டமாய் ஒன்றுகூடி வாழும்
வழிமுறை தான் காண்பாயோ!

எழுதியவர் : (28-Jan-12, 8:16 am)
பார்வை : 255

மேலே