என் திமிர்..! .பொள்ளாச்சி அபி

பெண்ணுரிமை..
பெண்சமத்துவம்..
பெண்விடுதலை..,
எப்போதும் பேசுகிறது மனம்.!
ஆனால்,
சாலையில் செல்லும்போது
முந்திச்செல்லும் பெண்ணை
ஜீரணிக்க மறுக்கிறது
இந்த ஆண்மனம்..!

வண்டியை முடுக்கி
அவளைக் கடந்து
செல்லும்போது,
துச்சமாய் ஒரு
பார்வை பார்த்து
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அவளை அடக்கியே வைத்த
என் திமிரை மீண்டும்
ஒருமுறை நிரூபித்து
செல்கிறேன் “நான்.”

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (28-Jan-12, 12:44 pm)
பார்வை : 282

மேலே