யார் என் கடவுள் ?
நான் கண்களை மூடவில்லை
நான் கை கூப்பி வணங்கவில்லை
நான் சுற்றியும் வரவில்லை
நான் படுத்தும் உருலவில்லை
அனால் கண்டேன் கடவுளை
என் தாயாக ,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவள்
கந்தாங்கி சேலையில
முடிஞ்சு வச்ச -காசபோல
எனைத் தாங்கி முடிஞ்சு வச்சா
அவ உசுரு மூச்சுக்குள்ள ,,,,,,,,,,,,,,,,,,,,,
வெள்ளிச் செடியில நிலா பூ
பூக்குதுனு சொல்லி ஊட்டிடுவா
அவள் விரல் கடஞ்ச சோர் அள்ளி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவ நினைக்கும் தெய்வங்களோட
கயிறெல்லாம்
என் கழுத்தில் நெறைஞ்சு இருக்கும்
அவளோட பயமெல்லாம் அந்த
கயிற்ருகுள்ள ஒளிஞ்சுருக்கும் ,,,,,,,,,,,,
அவள் தரும் முத்தங்கள்
நான் என் கன்னத்தில் -சேர்த்து
வைத்த ஒரு நிமிட பரிசு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவள் துயரத்தை
துப்பறிந்து விட்டு நான் தாயாவேன்
என்றும் என் கடவுளுக்கு ,,,,,,,,,,,,,,,,,,,,
இப்படிக்கு அன்பு மகன்
தினேஷ்பாபு