என் தாயிற்கு நன்றி சொல்ல

நன்றி சொல்ல நல்மனம் வேண்டும்
மன்னிப்புகேட்க தாராளமான மனம்படைத்திருக்க வேண்டும்
மன்னிப்பு வழங்க சுயநலமற்ற முழுமனதும்,
கடவுளின் குணமும் வேண்டும் -
பெரும்பாலானோர் நடைமுறை வாழ்வில்,
இவையனைத்தும் தாயிடம் கண்டிருக்க வேண்டும். ஆதலாலே
தாயை, வாழும் இவ்வுலகில்
கடவுளுக்கு நிகராகவும்,
நம் உயிருக்கு பொருளாகவும்
போற்றிவருகின்றனர்.

என் தாய்,
இஜ்ஜென்மத்தில் எனக்கு கிட்டியதற்கு
நான்தான் என்னதவம் என்று செய்தேனோ...?
படைத்த கடவுளுக்கு நன்றி - எனை
அன்று வயிற்றில் சுமந்து
இன்றும் என்றும் மனதில் சுமக்கும்
என் தாயிற்கு
என்றென்றும் என் பணிவான வணக்கங்களையும்,
மனமார்ந்த நன்றிகளையும்,
பணிவன்புடன் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாது
என்றென்றும் அவர்க்கு பணிவிடை செய்யவும் கடமைப்பட்டுள்ளேன்.

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Jan-12, 1:25 pm)
பார்வை : 349

மேலே