பொல்லாத காதல்
விதவிதமாக
விலையுயர்ந்த ஆடைகளை
அணிந்ததில்லை
வினாடிகள் நிமிடங்களாக
கண்ணாடி முன்
நின்றதில்லை
விரல்கள் உடைய
குறுஞ்செய்தி
அடித்ததில்லை
விடிய விடிய
தொலைபேசியில்
பேசியதில்லை
விரயமாகுதே என்றெண்ணாமல்
வீண் செலவுகள்
செய்ததேயில்லை
விரைந்து சென்று
வினோதமான இடங்களில்
காத்திருந்ததில்லை
விக்கலின்போதும்
உன்னையே நினைக்கும்
இந்தப் பொல்லாத
காதல் வரும்வரை...