மீசை வச்ச ஆசை மச்சான்
மீசை வச்ச ஆசை மச்சான்
மீன் கொழம்பு ஆக்கி வச்சேன்
மேனியையும் காய வச்சேன்
மேலே தாங்க பாசம் வச்சேன்
மேலைக் கடல் போன நீயும்
மேகத்தோடு கலந்து விட்டாய்..
சொன்ன பேச்சைக் கேட்காமல்
சுளுவா வருவேன்னு போனாயே
சுருட்டிக் கொண்டு போனதே
சுனாமி அலை உன்னையே...
சொர்க்கம் இனி என்ன இருக்கு
சொந்த மச்சான் போன பிறகு
ஆழிக் கிணறு திறந்திருக்கு....
ஆசைப் பட்டே போறேன் நானும்
அடுத்த ஜென்மத்தில் பாப்போம் மச்சான்..1