மரக்கட்டைக்குள் ஓடும் ரத்தம்..!

சீமானெல்லாம் வாரானுக
சிங்காரி என சொல்றானுக
செத்து செத்து பொழைக்கணும் - உணர்வு
செத்தது போல் கெடக்கணும்...அவனுக
சிரிக்கும் சத்தம் ஒப்பாரி எனக்கு..
திணிக்கும் இன்பம் நரகம் எனக்கு
ஒயிலே மயிலே குயிலே என்பான்
ஒரு சாண் வயிற அழகு என்பான் - அதன்
உள்ளுக்குள் பசிக்காய் என்னை விற்றேன்
புன்னகைக்கும் எவன் சிரிப்பும்
பொணச்சிரிப்பாய் .போனதென்ன...?
செல்வச் செழிப்பு எனக்கிருக்கு
சந்தோசம் மட்டும் எனக்கு இல்லை..!
மரக்கட்டைக்குள் ஓடும் ரத்தம்..!
மங்கை நான் யார் என சொல்வதற்கில்லை..1

எழுதியவர் : (31-Jan-12, 9:08 am)
பார்வை : 238

மேலே