நல்லா குடிங்க..!!

ஒருவாரம் பட்ட கஷ்டம் ஒரே நாளில் தீர்ந்திடனும்
ஒருவார சம்பளமும் தண்ணியா கரஞ்சிடனும்
ஒருவாரம் பட்டபாடு பட்டுவாடா ஆயிடனும்
குடிங்க ராசாக்களே குடிங்க

அம்மா அப்பா ரொம்ப சந்தோஷ படுவாங்க
பொண்டாட்டி புள்ளங்க ரொம்ப குஷி ஆவாங்க
அக்கா தங்கச்சி ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்பாங்க
குடிங்க ராசாக்களே குடிங்க

சாக்கடையில குளிச்சி புழுதியில பொரண்டு
குப்ப தொட்டி ஓரத்துல சொகமா தூங்கி
மானம் கெட்டு ரோட்டுல கெடக்கனுமா
குடிங்க ராசாக்களே குடிங்க

பொண்டாட்டி தாலி நகைய வச்சி குடிங்க
புள்ளங்க படிப்புக்காக இருந்த பணத்த குடிங்க
உங்கமவ கல்யாணத்துக்கு சேத்தபணத்த குடிங்க
குடிங்க ராசாக்களே குடிங்க

வாய்க்கு வந்தத தாறுமாறா உளறி
கேட்கமுடியாத கெட்டத கூசாத பேசி
சோம்பேறியா திரிஞ்சி தறிகெட்டு நிக்கனுமா
குடிங்க ராசாக்களே குடிங்க

குடல் அரிச்சி கணையம் வெந்து
நுரையீரல் போகஞ்சி ரத்தம் கக்கி
கொடுஞ்சாவு தேவைன்னு ஆசைப்பட்டா
குடிங்க ராசாக்களே குடிங்க

உங்க குடும்பம் ஆதரவு இல்லாம தவிக்கிறத
பொண்டாட்டி புள்ளங்க அனாதையா நிக்கறத
ஆவியா நின்னு ஐயோஐயோன்னு பாவியா பாக்கனுமா
குடிங்க ராசாக்களே நல்ல்ல்லா குடிங்க..........

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (31-Jan-12, 2:10 am)
பார்வை : 273

மேலே