இந்த கவிதை தற்கொலை செய்துவிடும்
உந்தன் பள்ளி,
உந்தன் வகுப்பறை என்று
தேடி வந்தவனுக்கு
உந்தன் பெஞ்சு மட்டும் கிடைக்கவில்லை.
இன்று சிரிக்கிறேன்
அன்று அழுததிற்காக..
ஆசிரியரை விட
அக்கா நீதான்
அதிகமாக கற்று கொடுத்தாய்..
அதில்
பாடங்களை விட
பாசங்கள் அதிகம்..
டியூஷன்
போகும்போதும்
வரும்போதும்,
நம் நண்பர்கள்
மனம் நொந்துபோகும்.
இவர்கள் எவ்வளவு நண்பர்கள் என்று..
உனக்கும்
எனக்கும்
கருப்பை தான் வேறு..
அனால் நமக்கு
நட்புதான சோறு..
கால்கள்
இரண்டுபோல்
கூடவே நின்றாய்.
பயணத்தை
கற்றுகொடுத்து
விட்டு,
பயணத்தில்
எங்கு சென்றாய்?
பிரிந்து செல்ல
வழி இருக்கிறது.
அனால்
பிரிவிலும் கொஞ்சம்
வலி இருக்கிறதடி..
என்னை விட
என் கவிதைகளை
எழுதியது நீதான்.
நான் எழுதிய பின்பு
முதலில் படிப்பதும் நீதான்.
இன்றோ
எழுதுவதும் நான்தான்
படிப்பதும் நான்தான்.
என்னையும்
உன்னையும்
போல..
என் கவிதைக்கு
கல் நெஞ்சம் இல்லை.
படித்து
திருத்திவை.
இல்லையென்றால்
இந்த கவிதை
தற்கொலை செய்துவிடும்.