மனம் உருகி வேண்டுகிறேன்

உன்னை நான் நேசிக்கின்றேன்
உனக்காக உன்னையே விட்டு
கொடுத்தவள் இவள் ஆனா உன்
உள்ளத்தில் இருக்கும் இவளுக்கான
இடத்தை மட்டும் விட்டு கொடுக்கவே
மாட்டேன்
நான் உயிர் வாழ சுவாசம்
வேண்டாம் உன் பாசம்
போதுமடா என் சுவாசமே
உன் பாசம்தனேடா
மனசு முழுக்க வலியோடு
வாழ்கிறேன் ஆனாலும் உயிர்
வாழ்கிறேன் உந்தன்
உண்மை கண்டு என் உத்தமனே
எனக்குள் இனம் புரியாத வலி
ஆனாலும் தாங்கி வாழ்கிறேன்
எனக்காக நீ ஒருவன் இருக்கிறாய்
அன்பை செலுத்தி ஆதரவாய்
இருக்கிறாய் என்கிற ஒரே காரணத்தால்
உன்னிடம் மண்டி இட்டு மனம் உருகி
வேண்டுகிறேன் இறுதி வரை
உன் அன்பொன்றாவது எனக்கு
இறுதி வரை வேண்டும் ♥