தும்மல் சுவை
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கடைசியில் வந்து சேர்ந்தான்
கையில் இன்ஹெலருடன்
என்ன என்றேன்
சளி ரன்னிங் நோஸ் என்றான்
தும்மினான்
வாழ்க என்று வாழ்த்தினேன்
மீண்டும் தும்மினான்
வாழ்க
......
.......
சிரித்தேன்
எதற்கு என்றான்
வள்ளுவர் நினைப்பு
வந்தது என்றேன்
நீங்களும் தும்மல் குறள்*
கீழே படித்துவிட்டு வாருங்கள்
ம் ....படித்து விட்டீர்களா
நீங்கள் படித்து விட்டு
வருவதற்குள்
பத்து முறை தும்மிவிட்டான்
இவனிடம் கேட்க முடியுமா
யார் யார் நினைக்கத்
தும்மினாய் என்று
பாவம் கண்ணா
மனம் நொந்து போவான்
----கவின் சாரலன்
*தும்மல் குறள் மேலே திருக்குறளில் சொடுக்கவும்
காமத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் :புலவி நுணுக்கம்
குறள் எண்:1317