கணினி அழுகிறது ....
1837 இல் சார்லஸ் பாபேஜ் என்னை
வடிவமைத்தார் நான் பரவசப்பட்டேன்
மக்கள் என்னால் பயனடைவார்கள்
என்று ஆனந்தப்பட்டேன் .....
அவர்களும் மெருகேரினார்கள்
என்னையும் மெருகேற்றினார்கள்
காலம் செல்ல செல்ல என் ஆசை நிறைவேறியது .............
நல்லவர்கள் நல்லவிதமாக பயன்படுத்தும்போது
என் கண்ணில் வந்தது ஆனந்த கண்ணீர்
ஆசையைவிட அதிகரித்தது என் புலம்பல்
சிலர் பலவிதத்தில் பயன்படுத்தும்போது
என் மக்கள் சிலர் என்னால் தீய வழியில்
செல்கிறார்களே என்று ....
இப்படிக்கு கண்ணீருடன் கணினி .........