காதல் ஜென்மம்
என் நெஞ்சோடு கலந்துவிட்ட உன் பிம்பம்..
இதை எண்ணி வாழ்வதுதான் என் இன்பம்..
ஏன் என்று கேட்க யாருமில்லை ஒரு நாதி..
நான் சொல்கிறேன் இன்று உனக்கொரு சேதி..
நீதானே என்றும் எனக்குள் பாதி...??
இது தெரியாமல் எனை தவிக்க விட்ட பாவி..
என்றும் உனையே சுற்றும் என் ஆவி ...
ஏரேழு ஜென்மமும் நீதான் எனக்கு தேவி ....